ஒரு சிலருடைய கணணிகளில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமையானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் கணணிகளிலும், மேக் கணணிகளிலும் கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கணணிக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கணணி பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று தவறாக கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில மின்னஞ்சல்களை திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கணணியில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கணணிகளை பொறுத்தவரை சில விடயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள் இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் கோப்புக்களை தரவிறக்கம் செய்து இணைத்து இயக்கிவிட்டால் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்த வரை அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே பெரும்பாலானவர்கள் தங்களின் கணணிகளில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கணணிகளில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவதில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான் உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை.
பின் வந்த காலங்களில் மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில் அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி கணணியின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து நேராக கணணியை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன.
இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் 2008 ஆம் ஆண்டிலேயே இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் கோப்பாக தரப்பட்டது. ஆனால் பலர் அதனைக் கொண்டு தங்கள் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே.
ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் நிறுவப்படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பொக்ஸ் ஒன்றைக் காட்டி அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை நிறுவச் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது கணணி, மேக் என்ற பாகுபாடு இன்றி வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் கோப்புக்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கணணியை பாதுகாத்திடும் வழியாகும்

0 comments:
Post a Comment