Thursday, November 14, 2013

http://www.netwind.com/assets/images/powerpoint2007.gif












நம்மில் பலர் மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை பயன்படுத்தி வருவோம். எளிய முறையில் தகவல்களை தொகுத்து அனிமேஷன் வேலைகளுடன் வழங்க உதவும். இதன் பயன்பாடுகள் விரிவானவை.

இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட் அல்லது பவர்பாய்ன்ட் வியுவர் தேவைப்படும். இவற்றை வீடியோ கோப்புகளாக மாற்றுவது பவர்பாயிண்ட்டில் இயலாத காரியம். வீடியோவாக மாற்றினால் கணினி, மொபைல் டிவிடி பிளேயர் என்று பயன்படுத்தி கொள்ளலாம். 

Leawo PowerPoint to Video Free. இந்த இலவச மென்பொருள் மூலம் மேற்சொன்ன வேலையை செய்ய வைக்க முடியும். பவர்பாய்ன்ட் கோப்புகளை ASF, WMV, 3PG, 3G2 வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை இந்த 
சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


PPT, POT, PPTX, PPS என்று அனைத்து விதமான பவர்பாயிண்ட் கோப்புகளையும் ஆதரிக்கும். அனைத்து அனிமேஷன்களும் வேலை செய்யும். வீடியோவிற்கு இசையை தனி டிராக்காக சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட வீடியோக்களை யுடியுப் மாதிரியான தளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். 

மென்பொருளை Download செய்ய.. 

http://ikeandriani.files.wordpress.com/2009/11/twinmos-mirror-finished-usb-flash-drive.jpg

 











நீண்ட இடைவெளியின் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, வலைத்தளத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. எனினும் அக்கால இடைவெளியில் நான் முகம்கொடுத்த பிரச்சினைகளில் ஒன்று எனது பென் ட்ரைவில் Write protected என ஒரு செய்தி வந்ததே.

சில வேலைகளில் நீங்களும் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பீர்கள், Pen drive வினை வீசி புதிய Pen drive வாங்கி விட்டீர்களா? அதற்காத தீர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

இதற்கு முன் என் சில நண்பர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் வந்திருக்கின்றன என்றாலும் என்னால் எதுவித தீர்வுகளையும் வழங்க முடியாமல் போய்விட்டது, அதனால் அவர்களும் தம் Pen drive வினையே வீசிவிட்டார்கள்.
முதலில் Write Protected Pen drive வினால் ஏற்படும் பிரச்சினைகளை பார்ப்போம், இவ்வாறான பென்ட்ரைவிலுள்ள கோப்புகளை நம்மால் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாது, அவ்வாறு மாற்றங்களை செய்ய முற்படும் போது பின்வரும் செய்திகளை காணக்கூடியதாக இருக்கும்.

  • Cannot copy files and folders, drive is write protected
  • Cannot format the drive, drive is write protected
  • The disk is write protected
  • Remove write protection or use another disk
  • Media is write protected 

usb-drive-write-protected

இவ்வாறான பிரச்சினைகள் pen drive களில் மடடுமன்றி memory card மற்றும் iPod போன்ற USB portable devices களிலும் தோன்றலாம். இதனால் உங்கள் பென்ட்ரைவினை format செய்யகூட முடியாத நிலை ஏற்படும். இது பலருக்கு தலையிடியாக கூட இருந்திருக்கலாம்.

http://img.ehowcdn.co.uk/article-page-main/ehow-uk/images/a07/tq/oh/fix-drive-thats-write-protected-800x800.jpghttp://www.thelifedigital.com/wp-content/uploads/2009/03/viruspenflashdrive.jpg


இதற்கு சில Virus கள் மற்றும் முறையற்ற ரீதியில் கணனியிலிருந்து Safety remove  USB செய்யாமையே காரணங்களாக குறிப்பிடலாம். 

தீர்வு : -

இதற்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும் மிகச்சிறந்த தீர்வினை உங்களுடன் பகிர்கின்றேன்.

01. இங்கு தரப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், தரவிறக்கச் சுட்டி
பின்னர் உங்கள் Pen drive வினை கணணியுடன் இணைத்து தரவிறக்கிய மென்பொருளை டபல் கிளிக் செய்யுங்கள், உங்கள் பென் ட்ரைவ் Format ஆக தொடங்கும். Format ஆகி முடிந்தவுடன் Pen drive வினை Safety remove செய்து மீண்டும் கணனியில் பொருத்துங்கள்,
சில நேரங்களில் உங்கள்  Pen drive வின் Write protected இப்போதே நீக்கப்பட்டிருக்கும். 
அவ்வாறு இல்லையெனின் அதாவது இன்னும் Write protected என காட்டப்பட்டிருப்பின், கீழுள்ள படிமுறைகளை செயற்படுத்துங்கள்.

02. Start --->> Run, கிளிக் செய்து regedit என டைப்செய்து Enter பொத்தானை அழுத்துங்கள், பின்  registry editor திறக்கும். அதில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies

 write-protection-registry
செல்லுங்கள், அங்கு StorageDevicePolicies என இல்லாவிடின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து add.bat  பின் டபல் click செய்யுங்கள். இப்போது registry editor இல் Storage Device Policies இடப்பட்டுவிடும். 
பின் WriteProtect எனும் Key யினை Double Click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Value Data எனும் பகுதியில் 0 (பூச்சியம்) என டைப் செய்து  OK பொத்தானை அழுத்துங்கள்.


பின்னர்  Registry யை மூடி விட்டு , கணணியை restart செய்யுங்கள். மீண்டும் உங்கள் பென் ட்ரைவினை கணனியில் பொறுத்துங்கள், அவ்வளவே தான்...

இன்னும் உங்கள் Pen drive வில் Write Protected என செய்தி வருகின்றதா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்


இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

 கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர்.  இனிமேல் மௌஸ்,
 கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.


 கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.  இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.


 ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.











கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.

இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.



1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.

2) அதில்  Storage  சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.


4) பின்னர் அதில் Right click செய்யது  Shrink Volume என்பதை click செய்யுங்கள்.    அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்த Partition  இல் உள்ள  free space ன் அளவை காட்டும்.

5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.


6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய  Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.

7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.
8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை  தெரிவு செய்யுங்கள்.

9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).

10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

11) பின்னர் Format Settings  இல் NTFS என்பதை File System  பிரிவில் தெரிவு செய்யுங்கள்.  Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).


12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது. 

உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் இருப்பின்  commentகளாக பகிர்க.இப்பதிவு பிடித்திருந்தால் share செய்யவும் மறக்காதீர்கள்..


ஆம், இது உண்மை தான்.  Google chromeமற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான்Maxthon 3.0. நான் Maxthon 3.0பயன்படுத்துவதற்கு முதல் Google chrome இனை பயன்படுத்தி வந்தேன், சில நேரங்களில்திடீரென்று crashes ஆகிவிடும். ஆனாலும் என்னால்Google chromeஐ மாற்ற மனமிருக்கவில்லை ஏனென்றால் எனக்கு வேகமும் வேகமான உலாவியொன்றும் தேவைப்பட்டதே அதற்கு காரணம். நான் Google chrome லிருந்துMaxthon 3.0 ற்கு மாற காரணமும் அதுவேதான், மேலும் Maxthon 3.0 மிக இலகுவாக பயன்டுத்தலாம்.  வேறு எந்த உலாவியிலும் இல்லாத பல advance optionகள் Maxthon 3.0 ல் உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த உலாவி பிடிக்கும் என நினைக்கிறேன், அப்படியென்றால் Maxthon 3.0 யில் என்னென்ன விசேட அம்சங்கள் இருக்கிறது என பார்ப்போமா? நிச்சயமாக இதன் சிறப்பம்சங்கள் உங்களை கவரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.



Maxthon இன் சிறப்பியல்புகள் 
  1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது. 

  2. Auto -completes நினைவகத்தை கொண்ட  Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
  3.  Magic Fill Manager எனப்படும் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை save செய்து கொள்ளமுடியும்.

  4.  Popup ads மற்றும்  சில தேவையற்ற windows ளை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும். மேலும் Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.

  5. Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன் அல்லது shortcut படடன்களை பாவிக்காமலே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடும்.

  6. இதன் இன்னுமொரு சிறப்பியல்பு Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

  7. அடுத்ததாக Drag and Drop Search எனும் வசதி, உலாவியில் உள்ள எந்தவொரு சொற்கள் அல்லது வசனங்களை தெரிவுசெய்து நகர்த்தி Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்துவிடும்.

  8. உலாவியிலுள்ளவற்றை இலகுவாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது, மேலும் Redo Page, Home, Recently viewed pages, back மற்றய பொத்தான்கள் இவ்உலாவிக்கு அழகை தருகின்றன.

  9. Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது, இவற்றை வெவ்வேறான தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

  10.  மேலும் Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save செய்து கொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  11. இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons  வசதியையும் தருகிறது, இதை இங்கே பெற்றுக்கொள்ளhttp://addonsmx.maxthon.cn முடியும்.
இதை விடவும் மேலும் பின்வரும் வசதிளையும் Maxthon கொண்டுள்ளது.
  1. Synchronizing the general browser Settings,
  2. Setting favorite Search Engines
  3. Tab bar and Smart Address Bar
  4. Page zoom settings
  5. Magic fill and shortcuts
  6. Proxy and Other settings.
இதன் சில வசதிகள் வியக்கத்தக்கவையாகவே உள்ளன. ஏன் இன்னும் பார்த்துகொண்டிருக்கின்றீங்க? இப்போதே Maxthon 3.0ஐ இலவசமாக எடுத்துகொள்ளுங்கள்.....











 Google நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.  Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Chrome  இ​ணைய உலாவி மென்பொருளை நம் கணனியில் தறவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும் போது வெகு நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படும். இற்கு தீர்வாக Offline  Installer னை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து தேவைப்படும் நேரங்களில் இணைய இணைப்பு இல்லாத நேரங்களிலும் கணனியில் நிறுவிக்கொள்ள முடியும். 

Add captionGoogle Chrome2 ஆனது GPU accelerated video decoding, New Adobe Flash, Do not Track போன்ற மேலும் பல வசதிகளுடன் வந்திருக்கின்றது.



Google Chrome23 இனை                                                                                  செய்ய இங்கே செய்யுங்கள். 

http://techiezlounge.com/wp-content/uploads/2010/11/Yahoo-Messenger-Beta-11.jpg 

இதோ Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். உங்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் புதிய Yahoo புதுப்பித்தல்கள் (updates) மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம். 

http://img.teck.in/yahoo_mgr_facebook.jpg
  1. முதலாவதாக yahoo messenger 11 betaவை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  2. பின் அதனை உங்கள் கணனியில் நிறுவும் போது உங்கள்  yahoo account ஐ facebook உடன் தொடர்பு படுத்த வேண்டுமா? என கேற்கும், அதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  3. பின்னர் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைய (log in) ஆகுக, என கேட்கும்.
  4. நீங்கள் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைந்த பிறகு yahoo applicationஅனுமதிக்க கூறி கேட்கும், அதனை (allow)அனுமதி கொடுங்கள்.
  5. இப்பொழுது நீங்கள் Facebook உடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.
  6.  Yahoo Messenger இல் log in ஆகியவிட்டதும் Facebook ற்கு  log in ஆகாமலே  Facebook நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

  7. மேலும் Yahoo Messenger உள் நின்றபடி Facebook அரட்டை தொடர்பை log off அல்லது  log in ஆகவும் முடியும்.

  8. அது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த  facebook games களையும் விளையாட முடியும். மேலும் பல முக்கியமான plug-ins களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக Picasa, YouTube, Pandora, Blogger போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ள கூடிய வகையானவற்றை வழங்குகின்றது.
http://maxcdn.jaypeeonline.net/images/yahoomessenger11beta2.png

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ள yahoo blogற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.


  • YAHOO MESSENGER 11 BETA (OFFLINE 17mb) வை தரவிறக்கம் செயயஇங்கே கிளிக் செய்யுங்கள்.

  •  

  • DOWNLOAD YAHOO MESSENGER 11 BETA (ONLINE 416.61kb) வை தரவிறக்கம் செயய இங்கே கிளிக் செய்யுங்கள்.

இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizer எனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entriesசில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம்  IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை  களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

IDM  இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம் Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதலில்  IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். 

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exitசெய்யுங்கள். (System Tray இல் உள்ள  IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe ஐ D/Clickசெய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும். 


அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OKபொத்தானை அழுத்துங்கள்.


மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி 
செய்து பாருங்கள். 

(Blue Ray Disk)புளு ரே டிஸ்க் 100 GB

Posted by jameel | 7:10 PM Categories:

பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்களில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன.  
தற்போது அதிக பட்சமாக, ஒரு புளு ரே டிஸ்க்கில், ஒரு லேயருக்கு 25ஜிபி டேட்டா பதியப்பட்டு, இரண்டு லேயர் புளு ரே சிடியில் 50 ஜிபி டேட்டா கொள்ளளவு இருக்கும்படி கிடைக்கின்றன. இவற்றை இயக்கவும் தனி வகை புளு ரே சிடி ட்ரைவ்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன்.

அண்மையில் ஜப்பானில் இதில் ஒரு பெரிய அளவிலான மேம்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஷார்ப் மற்றும் டி.டி.கே நிறுவனங்கள், 100 ஜிபி கொள்ளளவுடன் புளு ரே டிஸ்க்குகளைத் தயாரித்து வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன. ஜூலை முடிவில் ஷார்ப் நிறுவனமும், செப்டம்பர் மாதத்தில் டி.டி.கே. நிறுவனமும் இவற்றைக் கொண்டு வருகின்றன.

http://www.techdigest.tv/supermultiblue.jpg

இந்த புளுரே சிடி பி.டி.எக்ஸ்.எல் (BDXL) வரையறை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லேயரில் 33.4 ஜிபி டேட்டா அமைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு சிடியில் நான்கு லேயர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 100 ஜிபி டேட்டாவினைப் பதிய முடிகிறது. 

பி.டி.எக்ஸ்.எல். சிடி ப்ளேயர்களில், பழைய சிடிக்களையும் இயக்க முடியும். ஆனால் பழைய சிடி பிளேயர்களில், இந்த சிடியினை இயக்க முடியாது. 
இந்த வகை 100 ஜிபி புளு ரே சிடிக்களும், அதற்கான பிளேயரும் தற்போதைக்கு ஜப்பானில் மட்டுமே கிடைக்கும்

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 


ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver. 


இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும். 


இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 


நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 


இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.






இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security  மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் USB Disk security இன் இலவச பதிப்பையே பயன்படுத்துகின்றனர். அது குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை மட்டுமே ​கொண்டிருக்கும். Pen Drive களிலிருந்து கணனிக்குள் Virus , malicious வருவதை தடுப்பதற்காகவே பயன்படுத்தப் படுகின்றது.


இம் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணனிக்கு Pen Drive களினால் வரக்கூடிய Virus, malicious களின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.  மேலும் உங்கள் கணனியை பாதுகாப்பதற்கு இதனை update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே Internet பொறுத்தப்படாத கணனிகளிலும் இம் இம்மென்பொருளை பயன்படுத்த முடியும்.


 இம் மென் பொருளை பயன்படுத்துவதனால் உங்கள் கணனியின் வேகத்தில் எது வித குறைவும் ஏற்பட மாட்டாது. அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.





 Pen Drive களில் உள்ள Virus களை அழித்துக்கொள்ளவும் முடியும்.



இதில் உள்ள சிறப்பம்சங்களை உங்கள் கணனியில் நிறுவி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube