Monday, November 25, 2013

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம் அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் . அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது.


அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டு எடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகின்றது.இது விண்டோஸ் தளத்திற்கு ஏற்ற ஒரு மென்பொருள் .



                                            


இதை பதிவிறக்க : 
                                       


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.பின் இந்த செயலியை திறக்கவும் .அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த இடத்தில் கோப்பினை இழந்திர்கள் மற்றும் அது எந்த வகையான கோப்பு ஆகியவற்றைக் கவனமாய் கொடுக்கவும். பின் அந்த கோப்பினை மீட்டு எடுக்கலாம்.


வன்தட்டு,பிளாஷ் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற இதர சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டு கொள்ள முடியும்.


                               
உங்களுடைய கணினி அடிக்கடி  RESTART  ஆகின்றதா ? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா ?இதற்கான காரணம் ஒரு வேலை நம்முடைய கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் கூட இருக்கலாம் . 


                                                  


அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் . உங்கள் கணினியின் அனைத்து பாகங்களின் வெப்ப அளவினையும் அறிந்து கொள்வதுடன் குளிர்விக்கும் மின்விசிறி ஓடும் வேகத்தையும் மாற்ற உதவுகிறது. மற்றவற்றை போன்று அல்லாமல் இது உங்கள் கணினியின் வண்வட்டையும் (HARD DISK) தொடர்பு கொண்டு அவற்றின் வெப்ப அளவினை நமக்கு காட்டுகின்றது . 

இந்த மென்பொருள் தாய்ப்பலகையில் (MOTHER BOARD) இருக்கும் டிஜிட்டல் டெம்பரேச்சர் சென்சொர் எனப்படும் வெப்ப உணரிகளின் மூலம் வெப்ப அளவினை கணக்கிட்டு அதற்கேற்ப மின்விசிறியின் வேகத்தை மாற்றியமைக்கிறது.அதனால் கணினியுடன் சி.பி.யு கேபினெட்டில் (CPU CABINET ) இருந்து வரும் சத்தம் குறைகிறது .


                                               


இது ப்ராசரில் உள்ள ஒவ்வொரு உள்ளகத்தின் பயன்பாட்டையும் ,வெப்ப அளவையும் காட்டுகிறது.இது விண்டோஸ் 9X முதல் விண்டோஸ் 7 வரை உள்ள எல்லா இயங்குதளங்களிலும் இயங்குகிறது . இவை 64 பிட் இயங்குதளத்திலும் சிக்கலின்றி இயங்குகிறது .

கணினியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாகினால் அந்த கோப்பினை வலது கிளிக் செய்து அதன் உடமைகளை பார்த்தால் கோப்பினை உருவாக்கிய நாள் , நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு கோப்பினை உருவாக்கியவாறு நாம் தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டியது வரலாம் .அந்த மாதிரி நேரத்தில் கைக்கொடுகிறது இந்த மென்பொருள்.


                                              


இதன் பெயர் FILE DATE CHANGER . இது மிகவும் சிறிய கொள்ளளவு கொண்டது 
இதை பதிவிறக்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்


                                                      


                                           



ஏற்கெனவே உருவாக்கி உள்ள கோப்பின் உடமைகளை(PROPERTIES) பாருங்கள். இப்போது இந்த மென்பொருள் மூலம் அந்த கோப்பினை தேர்வு செய்யுங்கள் . இதிலுள்ள SIMPLE CHANGE FILE DATE என்பதை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டு வந்து,ஓகே கொடுத்தவுடன் ஒரு விண்டோ ஒன்று வரும் அதற்கும் ஓகே கொடுங்கள். இப்போது கோப்பின் உடமையை சென்று பாருங்கள் கோப்பின் தேதி மாறி இருக்கும்.

வணக்கம் நண்பர்களே நாம் கணிணியை பயன்படுத்தும் போது சிலசமயம் தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம். ஆனால் அந்த file அழியாமல்  Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும். மேலும் அந்த பைலும் அழியாது.இந்த செய்தி வந்ததும் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இணயத்தில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று தேடுவோம் .இந்த பிரச்சனையை போக்குவதர்க்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி அழிக்க முடியாத பைல்களை இலகுவாக அழித்திடலாம்


                                         


வேறு சில நேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் பைல்கள் அழியாது. 
அவை 
1. அந்த பைல் நெட்வொர்க்கில் பகிரப்பட்டிருந்தால் அழியாது.
2. அந்த பைல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அழியாது. 
3. வேறு ஒரு யூசர் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அழியாது.
4. அந்த பைல் ரைட்-புரெடெக்ட் செய்ய்ப்பட்டு இருந்தால் அழியாது. 

இது போன்ற பைல்களை அழிப்பதற்கான மென்பொருள் 


இப்பொழுதெல்லாம் கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது.


                            

எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.குவிந்திருக்கும் பைல்களில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது, எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறியமுடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில், பைல்களை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில், இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது.


இதன் பெயர் WinDirStat.


இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், அது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர், நம் டிஸ்க்கில் எத்தகைய பைல்கள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு, அவை கலந்த சதுரங்களால் காட்டப் படுகின்றன.


இந்த வண்ண சதுரங்களும், பைலின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாம் எந்த பைல்களை அழிக்கலாம் என முடிவு செய்து, நீக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு வகை பைல்களை நீக்கலாம். எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட பைல்களிலிருந்து, பைல்களைப் பெற்ற பின்னரும், ஸிப் பைல்களை நாம் கம்ப்யூட்டரில் வைத்திருப்போம்.

இவற்றை மொத்தமாக நீக்கலாம். இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை பைல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில பைல்களை நீக்கலாம். 

இதனை எப்படி மேற்கொள்வது?


WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர், எந்த ட்ரைவ் குறித்த பைல் தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர, புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன், ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும்.


இதன் முதல் பாதியில், பைல்களும் போல்டர்களும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப் படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது பைலைக் கிளிக் செய்தால், அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய பைல்களை, அதாவது, டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் பைல்களை, அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.


அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது. முதலாவதாக, (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று, பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக, நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கம்ப்யூட்ட ரிலிருந்து அடியோடு நீக்குவது. 


இந்த முறையில் தேவையற்ற, அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பைல்களை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி, டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே, ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல், அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும்.


ஏனென்றால், ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும், அந்த பைலின் சில அம்சங்கள், நம் கம்ப்யூட்டரில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

வணக்கம் நண்பர்களே,மடிக்கணினி வைதிருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது பேட்டரியின் அளவினை சரியாக தெரிந்து கொள்ள முடியாததே.ஆனால் இந்த மென்பொருளின் மூலம் உங்கள் மடிக்கணினியின் பேட்டரியின் BACKUP அளவினை துல்லியமாக் தெரிந்துகொள்ள முடியும்.இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக இணயத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளமுடியும். இது ஒரு வின்டோஸ் மென்பொருள். இது மடிக்கணிணியில் பேட்டரியின் அளவினை கிராப்பிக்ஸ் முறையில் காண பயன்படுகிறது. இது மடிக்கணிணியின் பேட்டரி எவ்வளவு நேரம் உழைக்கும் என்பதை டாஸ்க்பாரில் காட்டுகிறது.

                                                 

கீழ்கண்ட வண்ணங்கள் மின் சக்தி எவ்வளவு நேரம் நிற்கும் என்பதை அறிவிக்கிறது.

பச்சை - 40 சதவீதம் 

மஞ்சள் - 25 முதல் 40 சதவீதம்

சிகப்பு - 10 சதவீதத்திற்கும் குறைவாக

நீலம் - பேட்டரி மின் இணைப்பில் உள்ளது.

கருப்பு - பேட்டரி முழுமையாக உள்ளது.


                                                  

                                                  


                                  

நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம். அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா? இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.



உங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள், இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும். 

                                                  


அப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி? ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).


                                           

உங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும். 


                                                         Eraser தரவிறக்க 
                                            Eraser வலைப்பக்க முகவரி
உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும்.இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?

மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும்.


இதில்Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம்.


                                            

இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக்Full Computer Name என்று இருக்கும்.


இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ளChange என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்

நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் ‘Recovery partition உள்ளேயே இருக்கு’ என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.



இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில் பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும். 


இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம். 


இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.

இந்த Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 

சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். 

இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால், இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம். 

முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம். 

Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று PC Help & Tools மற்றும் Recovery Disc Creation ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள். 


Welcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள். 


இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள். 


   
Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள். 


முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் “Recovery Disc 1 of 2″ என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். 


                   
இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள். 


பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும். 



விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. 



முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.


இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும்.




சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.


இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும். 


மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும். 

மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. 



ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். ஆல்பா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது.
                                    

                                                   


பீட்டா நிலையில் அந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அம்மென்பொருளிலுள்ள நிரை குறைகள் கண்டறியப்படும்.


ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பை ஒரு முன்னோட்டமாகக் கருதலாம். ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பு அந்த மென்பொருளுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். எனினும் பரந்த அளவிளான விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்காது.


இந்த நிலையில் பீட்டா பதிப்பை பயன்படுத்துவோரிடமிருந்து மென்பொருள் பற்றிய கருத்துக்கள் சேகரிக்கப்படும். மென்பொருளை வெளியிட முன்னர் அவர்கள் எதனை விரும்புகிறார்கள், எதனை நீக்க வேண்டும் எதனை மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.




பீட்டா பதிப்பிலும் மூடிய பீட்டா (closed beta) திறந்த பீட்டா (open beta) என இரு வகைகளும் உள்ளன. . ஒரு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை மூடிய பீட்ட பதிப்பு எனப்படுகிறது. திறந்த பீட்டா பதிப்பு பொது மக்கள் யாவரும் பயன்படுத்துமாறு வழங்கப்படுவதாகும்.


பீட்டா பதிப்பில் இறுதியாக வெளிவிட விருக்கும் பதிப்பில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தாலும் அதன் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியையே வழங்கும். சில நிறுவனங்கள் தமது மென்பொருளைப் பல வருடங்களுக்கு பீட்டா பதிப்பிலேயே விட்டு வைக்கும். அப்போது முழுமையான பதிப்பைப் போலவே அதனைப் பலரும் பயன்படுத்தலாம்..


பீட்டா எனும் வார்த்தை கிரேக்க மொழி அரிச்சுவடியில் இரண்டாவது எழுத்தைக் குறிக்கிறது என்பது நீங்கள் அறிந்த விடயமே. பீட்டா பதிப்பு அல்லது பீட்டா சோதனை எனும் வார்த்தையை ஐபிஎம் நிறுவனமே முதலில் அறிமுகம் செய்தது.


ஐபிஎம் நிறுவனம் தனது கணினி வன்பொருள் சாதனங்கள் முறையாக இயங்குகிறதா எனச் சோதிப்பதற்கே பீட்டா சோதனை எனும் வர்த்தையைப் பயன்படுத்தியது, எனினும் தற்போது இந்த வார்த்தையை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.


அனேகமான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்க்ள் பாவனைக்காக வெளியிட முன்னர் பீட்டா பதிப்பையே முதலில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

நீங்கள் உங்கள் கணினியில் சில softwareகளை install செய்கையில் பல தரப்பட்ட சிக்கல்களையும் ,தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம்.இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர்.இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும்.அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.
        
                                                

சாப்ட்வேர் தொகுப்புகளை அல்லது சிறிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் நிறைய அறிவிப்புகள் வரும்.வெகு நீளமான டெக்ஸ்ட்டாக இருக்கும் என்பதால் நாம் கட கடவென நெக்ஸ்ட்,நெக்ஸ்ட் என அழுத்தியவாறு விரைவாக இன்ஸ்டால் செய்வோம்.ஆனால் அவை பல்வேறு கண்டிஷன் கூறி பின் இன்ஸ்டால் செய்கிறது என்பதனை உணர மாட்டோம்.அதன் பின்னர் பிரச்சினை ஏற்படுகையில் அதற்கான காரணத்தை அறியாமல் திகைக்கிறோம்.கீழே நல்ல முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கான சில டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.



சிஸ்டம் ஒத்துப் போகுமா?உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேடிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர் தொகுப்பின் பரிமாணங்களுடன் இன்ஸ்டால் செய்யவிருக்கும் சாப்ட்வேர் ஒத்துப் போகுமா?என்று அறிந்த பின்னரே இன்ஸ்டால் செய்திட வேண்டும்.இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் சாப்ட்வேர் குறித்து தரப்படும் தகவல்களின் இறுதியாக இவை குறிப்பிட்டிருக்கும் .பிராசசர் என்ன ஸ்பீட் வேண்டும்?எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும் ?மெமரி எவ்வளவு வேண்டும்?உங்களிடம் பழைய பெண்டியம் ஐ விண்டோஸ் 98,8 எக்ஸ் டிரைவ் என இருந்தால் நிச்சயம் இன்றைய நாட்களில் வரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.


லைசன்ஸ் ஒப்பந்தத்தைச் சற்றாவது படிக்கவும்.சாப்ட்வேர் இன்ஸ்டலேசன் பொது உங்களுக்கும் அந்த சாப்ட்வேர் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நீளமான ஒப்பந்தத்திற்கு "I Accept" என்பதை அழுத்தி நீங்கள் இசைவு தர வேண்டியது இருக்கும்.இந்த நீளமான ஒப்பந்தத்தினை சற்று சில இடங்களிலாவது படிக்க வேண்டும்.அதன் சில ஷரத்துகள் சற்று விவகாரமானவையாக இருக்கலாம்.எடுத்துக்காடாக ரியல் ஒன் ஆடியோ பிளேயரை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் அது உங்களுடைய பெர்சனல் தகவல்களை வாங்கிக் கொண்டு உங்கள் கம்ப்யூட்டரிலேயே அது பயன்படுத்த பதிந்து வைக்கும்.அது மட்டுமின்றி நீங்கள் "I Accept" என்பதனை அழுத்தும் போது உங்களுடைய பெர்சனல் தகவல்கள் அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளிக்கிறீர்கள்.இதனால் அந்நிறுவனம் மட்டுமின்றி சார்ந்த நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் அறிவிக்கைகள் உங்களுக்குத் தேவையோ இல்லையோ அவை ஸ்பாம் மெய்ல்கள் மாதிரி வந்து கொண்ட இருக்கின்றன.எனவே நீளமான அந்த ஒப்பந்தத்தில் Privacy policy statement என்று இருப்பதையாவது படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.




எங்கு இன்ஸ்டலேசன் ?இன்ச்டலேசனுக்கு முந்தைய விண்டோக்களில் நெக்ஸ்ட் என தொடர்ந்து அழுத்த வேண்டாம்.குறிப்பாக எந்த டிரைவில் இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது என்பதனை உணர்ந்தாக வேண்டும்.பொதுவாக அனைத்து புரோகிராம்களும் சி டிரைவிலையே இன்ஸ்டால் செய்திடும் படி செட் செய்திடப்பட்டிருக்கும் .ஆனால் நீங்கள் முடிவு செய்தால் அதனை வேறு ஒரு டிரைவில் இன்ஸ்டால் செய்திடலாம்.வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது.எனவே அந்த கேள்வி உள்ள விண்டோ கிடைக்கையில் அதற்கென சில டிரைவ்களை ஒதுக்கி அந்த டிரவ்களிலே பதியவும்.அப்படி வேறு டிரைவில் பதிந்தாலும் சாப்ட்வேர் ஒன்றின் சில பைல்கள் சி டிரைவில் பதியப்படும் என்பதனை இங்கு நினைவில் கொள்வது நல்லது.


ரீட் மி (Read Me) பைலைப் படிக்கலாமே! எப்போதும் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்ததற்காக நன்றி சொல்லிவிட்டு ரீட் மி பைலைத் தரட்டுமா என்று கேட்க்கப்படும்.பெரும்பாலானவர்கள் இதனை தள்ளி விட்டு புதிய சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தச் சொல்வார்கள்.ஏனென்றால் இந்த வகை பைல்களில் சட்ட ரீதியான ஒப்பந்தம் பற்றி மீண்டும் சில குறிப்புகள் இருக்கும் அல்லது தொழில் நுட்ப ரீதியாகத் தகவல்கள் இருக்கும்.ஆனால் சில வேளைகளில் சில சிச்டன்களினால் எப்படி அந்த சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று காட்டியிருப்பார்கள் .இதில் உங்கள் சிஸ்டமும் ஒன்றாக இருக்கலாம்.எனவே இதனையும் படித்து அறிந்து கொள்வது நல்லது.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே.எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது.அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

                                             

பணம்:


இதுதான் பலரை இழுக்கும் தூண்டில்.வைரஸ் உருவாக்கி பல வழிகளில் சம்பாதிக்கலாம்.முதலாவதாக டேட்டா திருட்டு.வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யுட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது.தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகி விட்டது.இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனை பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது.முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது.இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது.இவற்றை ஆங்கிலத்தில்"ransomware" என்று அழைக்கின்றனர்.ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.


தனி மனிதப் பிரச்னைகள்:


தாங்கள் மற்றவர்களை காட்டிலும் இருந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர்.இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இருந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கி விட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது.வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள்.அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்ற பின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார். 


குழு ஆதிக்கம்:


ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன.இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை.ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு.இதே போல் பல கும்பல்களை இண்டர்நெட்டில் காணலாம்.இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இருந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான். 


அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்:


அண்மையில் கட்சி ஒன்றின் இணைய தலத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்து விட்டதாக செய்திகள் வந்தன.இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான்.ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேளையாக உள்ளது.இவர்கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும்.எடுத்துக் காட்டாக ஔ அரசியல் கட்சியின் இணைய தளத்தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட்டது.ஆனால் அது நேராக அண்டக் கட்சியின் தளத்தை ஆக்கிரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை.அதற்குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது.அந்த வைரஸ் குறிப்பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத்தைத் தான் தங்கும் கம்ப்யூட்டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப்பட்டிருக்கும்.அது அடுத்த நிலையாக இருக்கும்.பாதிக்கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது.ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப்யூட்டர்களிலிருந்து அந்த கம்ப்யுட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரியாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப்சைட்டை தாக்கியிருக்கும்.இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தொறும் உருவாகி வருகின்றன.சைபர் உலகின் சாபக் கீடாக இது மாறி விட்டது.வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
கணினியில் இயந்திர உறுப்புகளை HARDWARE என்றும் அதனை இயக்க வைக்கும் ப்ரோகிராம்களை (மென்பொருள்களை) SOFTWARE என்றும் அழைப்பர்.ஆப்பரடிங் சிஸ்டம்(OPERATING SYSTEM) இயங்குதளம் 
குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது. கணினியில் Hard ware இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் ப்ரோகிராம்கம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் OPERATING SYSTEM வழங்குகின்றது.
                                      


நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.


ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.


சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.


எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.


நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.




கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.


கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.


எப்படிச் செய்வது?:


உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.


அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம்.


Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.


Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும்.


சில OPERATING SYSTEM கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.


இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube