Monday, November 25, 2013

இணைய இணைப்பு இல்லாத போதும் ஒரு இணையதளத்தை வாசிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக வாசிக்க முடியும். அதைப்பற்றித்தான் இந்த பதிவு.

சாதாரணமாக நமக்குப் பயன்படும் இணையதளங்களிலிருந்து தேவைப்படுவைகளை நாம் நம் கணினியில் சேமித்து வைப்போம்.

read website without internet

உதாரணமாக இணையத்தளத்திலிருக்கும் ஒரு படம் வேண்டுமானால், அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து Save Image As கொடுத்து சேமித்துக்கொள்வோம்.

அந்த இணையப் பக்கம் வேண்டுமெனில் Save As கொடுத்து அப்பக்கத்தை ஒரு Html Page ஆக சேமித்துக்கொள்வோம்.

இவ்வாறு சேமித்த படத்தையோ, அல்லது இணையப் பக்கத்தையோ மீண்டும் இணைய இணைப்பு இல்லாதபோதும் பார்வையிட முடியும். இதுபோல ஒரு முழு இணையத்தளத்தையும் நம்மால் பார்வையிட முடியுமா? என்றால் அது சிறிது கடினமே.

காரணம், ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் நாம் சேமித்துக்கொண்டிருக்க முடியாது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பதிவும் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றன' (Every articles are useful for us)அவற்றை இணைய இணைப்பு இல்லாத போதும் பார்வையிடவேண்டும் (without internet connection) என நீங்கள் நினைத்தால் அதற்கு உதவுகிறது
 இம்மென்பொருள்.

மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியவுடன் அதில் உங்களுக்கு பயன்படுகின்ற வலைத்தளம், அல்லது இணையதளத்தின் முகவரியை உள்ளிட்டு, உங்கள் கணினியில் எந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் (Destination Folder) என்பதையும் கொடுத்துவிட்டால் போதும்.

மென்பொருள் நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தை (a Particular website)அப்படியே சேமித்து வைத்துவிடும். பிறகு இணைய இணைப்பு இல்லாமலே நீங்கள் அந்த வலைத்தளத்தைப் பார்வையிட முடியும்.




0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube