Thursday, November 14, 2013

வின்டோஸ் கணனிகளில் USB device களை பொறுத்தும் போதோ அல்லது  CD/DVD disk களை உட்செலுத்தும் பதோ, windows Auto run Run utility யானது செயற்பட்டு படத்தில் காட்டப்படுவது போன்று தோன்றும்.

அதில் உங்கள் கோப்புகளை திறப்பதற்கான தெரிவுகள் காட்டப்படும். உ.தா view, Play, Do nothing போன்றவை அவற்றில் சில .



இச்சலுகையானது windows இயங்குத்தளத்தில் சிறந்த utility யாக காணப்பட்டாலும், தற்காலத்தை பொருத்தவரையில் மிக பயங்கரமானது எனவும் குறிப்பிடலாம். ஏனெனில் virus தாக்கப்பட்ட Usb drive அல்லது CD/DVD களை கணனியுடன் பொறுத்தும் போது உங்கள் கணனிக்குள் இலகுவாக வைரஸ்கள் உட்சென்றுவிடும். சில கணனி வைரஸ்களை  Auto run யை அடிப்படையாக கொண்டே தயாரிக்கின்றனர். எனவே உங்கள் கணனியை பாதுகாத்துக் கொள்வதற்கு Auto run வசதியை Disable செய்து கொள்வது சிறந்தது.

எவ்வாறு Auto run யை   Disable செய்வது என பார்ப்போம்.

01. Start Click செய்து Run செல்லுங்கள்.

02. பின் அதில் gpedit.msc  என டைப் செய்து Enter பொத்தானை அழுத்துங்கள்.
      பின்  Group Policy editor வின்டோ தோன்றும்.




03. அதன் இடது பக்கத்திலுள்ள Computer Configuration இல்Administrative Templates     
      சென்று System என்பதை தெரிவு செய்யுங்கள்.

04. அதன் வலப்பக்கத்தில்  Turn autoplay off  என்பதை Double click செய்யுங்கள் .

05. பின் அதில் “Enabled” என்பதை தெரிவு செய்து Apply செய்துOK செய்யுங்கள்.




வின்டோஸ் 7 இயங்குதளங்களில் 


01. Control Panel\Hardware and Sound\Auto Play சென்று
choose_autoplay_options



02. மேற்பக்கத்தில் Use Autoplay for all devices என்பதற்கு முன் உள்ள check box இன் தெரிவை நீக்கிவிட்டு Save பொத்தானை அழுத்துங்கள்.

உங்களின் தேவைகளையை பொறுத்து இச் சலுகைகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube