தற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.
- நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும்பொழுது,
- அல்லது உங்களுடைய பென்டிரைவ் (Pendrive) நண்பர்களுக்கு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தும்பொழுது,
- இணையம் வழியாக...
- ஒரு இணையதளத்தை திறந்திடும்பொழுது,
- இலவச மென்பொருளை டவுன்லோட் செய்திடும்பொழுது,
- உங்களுக்கு வந்த மின்னஞ்சலைத் திறந்திடும்பொழுது,
- மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கோப்பொன்றினைத் திறந்திடும்பொழுது..
இப்படி பல்வேறு வழிமுறைகளில் வைரஸ் கணினியில் நுழைந்துவிடுகிறது.
வைரஸ் வந்ததற்கான அறிகுறிகள்: -
- உங்களுடைய கணினி அப்படியே உறைந்து நின்றுவிடுவது.
- கணினித் திரையில் வெளிச்சம் மின்னி மின்னி தோன்றுவது...
- ஏதாவது வேலைகள் செய்திடும்பொழுது திடீரென ஒளி மங்கிப்போய் கணினி அனைந்துவிடுதல்..
- ஒரு புரோகிராமினைத் திறந்திடும்பொழுது, திரும்ப, திரும்ப அந்த புரோகிராம் திறந்துகொண்டிருத்தல்...
- கோப்புகள் பதிந்திருக்கும் கோப்புறைகளில் பல்படிம கோப்புகள் தோன்றியிருப்பது.
- கோப்புகள் அனைத்தும் அதனுடைய Shortcut காப்பியாக மாறியிருப்பது..
- தேவையில்லாத கோப்புகள் உங்கள் கோப்புகளுக்கிடையே பதிந்திருப்பது.
- கோப்புகளை திறந்துப்பார்க்கும்பொழுது முறையாக இல்லாதிருத்தல்(உதராணமாக எம்.எஸ் வேர்ட் பைல் திறந்து பார்க்கும்பொழுது, அதில் உள்ள எழுத்துக்கள் கட்டம் கட்டமாக, குறியீடுகளாக மாறிப்போயிருப்பது)
உடனடியாக உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் Anti-virus மூலம் கம்ப்யூட்டரை Full Scan செய்திட வேண்டும்.
ஏதேனும் வைரஸ் இருப்பின், ஆண்டி வைரஸ் மூலம் அதை நீக்கிவிட வேண்டும்.
உங்களுடைய ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் பழைய பதிப்பாக இருப்பின், புதிய வைரஸை கண்டறிய முடியாத நிலை ஏற்படும். எனவே உடனடியாக ஆண்ட்டி வைரஸ் மேம்படுத்தியோ, அல்லது புதிய ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் நீக்கிவிட வேண்டும்.
இல்லையெனில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகள் அனைத்தையும் வைரஸ் முழுவதுமாக ஆக்கிரமித்து, பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். சில சமயம் கம்ப்யூட்டரையே செயலிழக்கச் செய்துவிடும்.
0 comments:
Post a Comment